அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கா?

25 views

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார். 

முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. 

இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாக பாராட்டியுள்ளார். 

இதன்படி அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். 

அத்துடன், தாம் நோபல் பரிசுக் குழுவிற்கு இது தொடர்பில் பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.