எதிர்காலத்தில் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
அந்த மாணவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டங்களுக்கு அமைய, அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.