இலங்கை ஜனாதிபதியின் பெயரையே மாற்றிய ட்ரம்ப்!

27 views

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால், அதற்கு நிகராக தங்களின் 30 சதவீதம் என்ற புதிய வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 சதவீத புதிய வரியை அறிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நேற்று ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதேவேளை குறித்த கடிதத்தில், இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்செயலாகத் தவறாக எழுதியமை, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. 

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதம், நேற்று இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. 

இந்தக் கடிதத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, டொனால்ட் ட்ரம்ப், ‘அருண’ குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார். 

2025 ஜூலை 9 திகதியிட்டு வெள்ளை மாளிகையின், அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த தவறைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.