Wednesday, November 13, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஉலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொவிட் 19 பெருந்தெற்று பரவல் சர்வதேச ரீதியில் அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த 2020 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்த நிலையில், இந்த அவசர நிலை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவசரநிலை நிறைவுக்குக் கொண்டு வந்ததால், உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலாக கொவிட் 19 நிறைவடைந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நாளாந்தம் 6 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் வெள்ளிக்கிழமை (5) கொவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular