Thursday, November 7, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsசெயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம் - சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம் – சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 1998ல் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் கூகுள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதையடுத்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்நாளில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும். கணினியில் இருந்து ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறிய தொழில்நுட்பத்தைவிட, ஏன் இணையத்தைவிட இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். தொழில்நுட்பத்தின் மறுசீரமைப்பு மற்றும் மனித புத்திக் கூர்மையின் நம்பமுடியாத விஷயமாக இது இருக்கும்.

மனிதனின் நுண்ணறிவு மற்றும் நினைவாற்றலின் அளவை மீறுவதற்கு மூளை போன்ற பல நெட்ஒர்க்குகளை உருவாக்க ‘இயந்திர கற்றல்’ என்பது கணினிக்கு பல்வேறு தரவுகளை வழங்குகிறது. இது அனைத்துத் துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்துகிறது.

தேடுதல் மூலமாக கூகுள் பணம் ஈட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம்.

தற்போது இரு முறைகளில் தேடல் நிகழ்கிறது. ஒரு கேள்விக்கு விடை தேடும்போது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் நேரடி விடை கிடைக்கும், இல்லையெனில் அதுகுறித்த அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிலைக் கண்டறிந்து காண்பிக்கும்.

இருப்பினும், பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் சாட் ஜிபிடி(ChatGPT) இதனை ஒரே படிநிலையாகக் குறைக்கிறது. வேறு இணையதளங்களுக்கு எதுவும் செல்லாமல் உடனடியாக பதில் அளித்து தேடல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. இது மனிதனின் வேலைகள் பலவற்றை தேவையற்றதாக மாற்றும்.

உதாரணமாக மனிதர்களின் உதவியின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சட்டம் என பல துறைகளில் துல்லியமாக செயல்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளை காலர் தொழிலாளர்கள் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள், காவலாளிகள் என நீல காலர் தொழிலாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே செயற்கை நுண்ணறிவின் முதல் நிறுவனமாக கூகுள் இருக்க வேண்டும் என்று நான் தலைமை பொறுப்பை ஏற்றதுமே கூறினேன். கூகுள் நிறுவனம் கடந்த 2000 ஆண்டுகளில் இருந்து இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதனை முதன்மையாக பயன்படுத்தியும் வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் நாங்கள் முதன்மையானவர்கள். இதன் மூலமாக கூகுள் பல புதுமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular