ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சமீபத்தில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் கருத்து வௌியிட்ட தயாசிறி ஜயசேகரவின் உரையை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதவான் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் அவதூறான கருத்தை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்களால் தமது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதற்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான காணொளிகளை தயாசிறி ஜயசேகரவின் முகநூல், ஐக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அது 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.