தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு!

56 views

ஜூட் சமந்த

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் இன்று 18 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 4 வான்கதவுகள் தலா 03 அடி மற்றும் 2 வான்கதவுகள் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வான்கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 11,150 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.