புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் தலைமையில் நேற்று (06.02.2025) பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது 2024 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 9 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் அனுசரணையுடன் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
மேலும் மாணவர்களின் குறித்த வெற்றிக்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மேலதிக வகுப்புகள் மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்களினால் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவித்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


