Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாட்டின் பல பகுதிகளில் தரமற்ற காற்று பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் தரமற்ற காற்று பதிவு!

நாடளாவிய ரீதியில் 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்துடன், 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

இதேவேளை 201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular