நோன்புப்பெருநாளை முன்னிட்டு புத்தளம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்னிவெல் களியாட்ட நிகழ்வில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஷ்யமான பல வேடிக்கை வினோத நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ள போதிலும் கேசினோ வகையிலான சூதாட்டம் இடம்பெற்றுள்ளமையால் குறித்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து குறித்த விடயம் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அவர் குறித்த இடத்திற்கு விரைந்து சூதாட்டம் இடம்பெற்ற இடத்தை முற்றுகையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்னவின் அனுசரனையில் அவரது மச்சான் குமாரவினால் நடாத்தப்பட்ட சட்டவிரோத சூதாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் புத்தளம் கார்னிவெல் களியாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.