Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYபு/எருக்கலம்பிட்டி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி-தலைவர்

பு/எருக்கலம்பிட்டி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி-தலைவர்

எவ்வித தடையுமின்றி மாதா மாதம் சம்பளமும், பெருநாள் போனஸூம் வழங்கிய நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல்களில் பணிபுரியம் நமது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய உலமாக்கள் ,முஅத்தீன்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள்அனைவருக்கும் நமது ஊர் ஜமாஅத் உறுப்பினர்களின் அன்பான நிதி நன்கொடை மூலம் பெற்ற பணத்தொகை புனித ரமழான் நன்கொடையாக தாராளமாக- நியாயமான முறையில் இன்று அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்று௯டல், சமூக இடைவெளி பேணல் என அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மஸ்ஜித்களும் கட்டுப்பாட்டுடன் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் உலமாக்களின் மாதாந்த ஊதியம் மற்றும் ஏனைய விஷேட கொடுப்பனவுகள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு பூர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அசாதாரண சூழ்நிலையில் மஸ்ஜித்களில் கடமைபுரியும் உலமாக்களுக்கும், முஅத்தின்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குவதில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் நெருக்கடி நிலைமை உறுவாகியுள்ள நிலையில் இன்றைய தினம் பெருநாள் விஷேட நன்கொடையாக 3 பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் உலமாக்கல், முஅத்தினகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு வழங்ப்பட்டமை மிகுந்த திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மஸ்ஜித்களில் கடமையாற்றும் அனைத்து உலமாக்களுக்கும், முஅத்தின் மற்றும் ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குமாறு வக்பு சபை தலைவரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அஷ்ரப் ( நளீமி) அவர்கள் கடந்த வருடமும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மஸ்ஜித்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் எமது புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆப் மஸ்ஜித் நிர்வாக சபையினர் , தாராளம் மனம் கொண்ட மஹல்லாவாசிகளின் பூரண ஒத்துழைப்புடன் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் கடமைபுரியும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு உரிய மாதாந்த சம்பளம் மற்றும் பெருநாள் கொடுப்பனவு என்பனவற்றை எவ்வித குறையுமின்றி இம்முறையும் வழங்கியுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக பாடுபட்ட நிர்வாக சபையினருக்கும், மஹல்லாவாசிகளுக்கும், வெளி இடங்களைச்சேர்ந்த பரோபகாரிகளுக்கும் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லா நலவுகளையும் வழங்குவதுடன், வாழ்க்கையில் பரக்கத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்வதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

எமது எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய இந்த நடவடிக்கையானது புத்தளம் மாவட்டம் மாத்திரமின்றி, ஏனைய மாவட்டங்களில் உள்ள மஸ்ஜித் நிர்வாக சபையினருக்கும் ஒரு முன்னுதாரணமாகும் என ஊர் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தெரிவித்துள்ளமை ஓர் விஷேட அம்சமாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular