நாளை இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், ருவண்டா ஜனாதிபதி போல் ககாமையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் சந்தித்துள்ளார்.
இதன்போது, இதுதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.