இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
புகையிலைப் பொருட்கள் தற்போது பாடசாலைகளில் பெருகி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியாக இ-சிகரெட்டுக்களின் பாவனை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இ-சிகரெட்டுக்கள் மூலம் நிகோடின் பழக்கம் அதிகரிப்பதுடன் இது உடலிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நிகோடின் பயன்பாட்டால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பொதுவான உடல் அசௌகரியம் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிகோடினின் ஆபத்துக்கள் குறித்து சிறுவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார தெரிவித்துள்ளார்.


