இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 165 பில்லியன் ரூபா) நட்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் பரவலை அடுத்து, 2022ஆம் ஆண்டு விமானத்துறைக்கு வருமானம் கிடைக்கக்கூடிய காலமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த காலப்பகுதியிலும் நட்டத்தை சந்தித்த விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கடந்த வருட முதல் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.