கிளிநொச்சி அக்கராஜன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது.
இறந்தவரின் மகளுடன் சண்டையிட்டபோது, மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடிய நிலையில் மகளை தாக்க முற்பட்ட மருமகனை தடுக்க முற்பட்ட மாமனார் மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 59 வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
25 வயது மதிக்கத்தக்க மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராஜன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



