தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டில் (QR) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மாதம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், எரிபொருள் ஒதுக்கீடும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (மே 25) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகளுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.