அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பாக அறிவிக்கவும்
விலைகளைக் காட்சிப்படுத்தாமல், அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்த, குளியாப்பிட்டிய-கண்டி வீதியில், தெலியகொல்ல பகுதியிலுள்ள இரண்டு காய்கறிக் கடைகள் இன்று குருணாகல் மாவட்ட அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மத்திய மாகாணம் – 0771088918
மேல் மாகாணம் – 0770106603
வடமேல் மாகாணம் – 0771088902
சபரகமுவ மாகாணம் – 0771088912
ஊவா மாகாணம் – 0771088896
தென் மாகாணம் – 0771088915
வட மாகாணம் – 0771088910
வட மத்திய மாகாணம் – 0771088801
கிழக்கு மாகாணம் – 0770110096
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது எதிர்காலத்தில்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் வலியுறுத்தியுள்ளது.


