Saturday, February 1, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅதிரடியாக சென்ற சுகாதார அமைச்சர்!

அதிரடியாக சென்ற சுகாதார அமைச்சர்!

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கு வாய்வழி rehydration salts தீர்வாகப் பயன்படுத்தப்படும் வாய்வழி (Oral rehydration salts – (ORS)  தயாரிப்புகளை இலங்கையின் சுகாதாரத் துறை சந்தையில் தொடர்ந்து வழங்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இரத்மலானை களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு விசேட கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் சில குறைபாடுகள் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து முன்னறிவிப்பின்றி அமைச்சர் இந்த விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
நாட்டிலேயே ஜீவனி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மட்டுமே. அந்த கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் இரத்மலானை உற்பத்தி ஆலையின் அதிகபட்ச கொள்ளளவின் கீழ் 1000 M.L  பொதிகள் (33500 * 25) கொண்ட 25 தொகுதிகளும் தலா  200 M.L  பாக்கெட்டுகள் (165500  *  8) கொண்ட 8 தொகுதிகளும் மாதந்தோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது பாவனையில் இருக்கும் இயந்திரமும் 12 ஆண்டுகள் பழமையானது என்பதும் இங்கு தெரியவந்தது. தற்போதைய சந்தைத் தேவைக்கு ஏற்ற உற்பத்தித் திறனை ஒரு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய முடியாது என அமைச்சரிடம் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலைமை தொடர்பில் அரச மருந்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடிய அமைச்சர் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். மேலும் தற்போது நிலவும் ஊழியர் பிரச்சனைகள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜீவனி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக இரத்மலானையில் அமைந்துள்ள இந்த உற்பத்தி நிலையம் குளுக்கோஸ் மற்றும் தோல் மேற்பரப்பு பூச்சுகளையும் உற்பத்தி செய்கிறது. 23 ஊழியர்களும் அங்கு பணிபுரிகின்றனர்.

ரத்மலானை களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவின் பதில் முகாமையாளர் திரு.பிரதாங்க் பெரேரா, திரு.எஸ்.பி.குணதிலக்க மற்றும் பணியாளர்கள் குழுவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி மனுஜ் சி.வீரசிங்கம்ஹத்த தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கமளித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular