அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டளை பாராளுமன்ற அனுமதிக்கு..
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாரிய காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்குடன், 2025-09-25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் இல. 2 மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட அந்தக் கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கான பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


