கொத்மலை – ரம்பொடவில் இன்று இடம்பெற்ற வேன் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கொத்மலை – இறம்பொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கெரண்டிஎல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 17 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
