வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பொருட்களின் உதவிகளை அனைத்து சுங்க வரிகள் மற்றும் கட்டணங்களில் இருந்து விடுவித்து விரைவாக விநியோகிப்பதற்காக இலகுவான நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்காக WWW.CUSTOMS.GOV.LK என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
நன்கொடையாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் வகைகள் பற்றிய விரிவான தகவல்களை WWW.DONATE.GOV.LK என்ற இணையத்தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.


