அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் 2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகப் பிரிவு,
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு


