- “474 மில்லியன் டாலர் கொட்டியும் சரிந்த கோட்டை!” – அமெரிக்கத் தேர்தலில் எலன் மஸ்க்கிற்கு விழுந்த பாரிய மரண அடி!
- தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத மெகா சூதாட்டம்: டெக்சாஸை குறிவைத்து மஸ்க் வீசிய கோடிகள் கைகொடுத்ததா?
- பணபலத்தை முறியடித்த வாக்குபலம்: வோஷிங்டன் அதிகாரப் போரில் மஸ்க்கின் குடியரசுக் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வி!
அமெரிக்க அரசியல் களத்தில் இதுவரை எந்தவொரு தனி மனிதனும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பிரம்மாண்ட அரசியல் சூதாட்டத்தை உலகக் கோடீஸ்வரரான எலன் மஸ்க் இம்முறை முன்னெடுத்திருந்தார். அண்மையில் நடந்து முடிந்த 2026 இடைக்காலத் தேர்தலில், குடியரசுக் கட்சியை அரியணையில் ஏற்றும் ஒற்றை இலக்குடன் களமிறங்கிய அவர், தலைசுற்ற வைக்கும் வகையில் சுமார் 474 மில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 47.4 கோடி டாலர்) வாரி இறைத்து சர்வதேச அரசியலையே அதிர வைத்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தனிநபர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டது இதுவே முதற்தடவையாகும். தனது சொந்த அரசியல் அமைப்பான ‘அமெரிக்கா பிஏசி’ (America PAC) மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னணி நிதியக் குழுக்கள் மூலமாகவே இந்த பிரம்மாண்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், இந்த மொத்த நிதியில் அரைவாசிக்கும் அதிகமான தொகை—அதாவது கிட்டத்தட்ட 224 மில்லியன் டாலர்கள்—டெக்சாஸ் மாநிலத் தேர்தல்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டமையாகும்.
ஏன் டெக்சாஸ் மீது இவ்வளவு வெறித்தனமான கவனம்?
காரணம் மிகத் தெளிவானது. மஸ்க்கின் பிரம்மாண்ட சாம்ராஜ்யங்களான டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள மாநிலம் அது. டெக்சாஸ் தனது அரசியல் கோட்டையாகவும், வணிகப் புகலிடமாகவும் திகழ வேண்டும் என்ற நோக்கில், அங்கு போட்டியிட்ட செனட் வேட்பாளர் கென் பாக்ஸ்டன் (Ken Paxton) மற்றும் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) ஆகியோரின் வெற்றிக்காக மஸ்க் நேரடியாகவே களமிறங்கி தீவிர பிரசார வியூகங்களை வகுத்தார்.
ஆனால் மஸ்க்கின் களம் அத்தோடு நின்றுவிடவில்லை; வோஷிங்டன் அதிகாரத்தைக் கைப்பற்ற மிச்சிகன், விஸ்கான்சின், ஓஹியோ, மெய்ன், நியூ ஹாம்ப்ஷயர், அயோவா மற்றும் அலாஸ்கா ஆகிய 7 அதிமுக்கிய செனட் தொகுதிகளிலும் அவரது படைகள் களமிறங்கின. அதுமட்டுமன்றி, சுமார் 44 நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபைத் தொகுதிகளிலும் வாக்காளர்களைத் தன்வசப்படுத்த தீவிரமான விளம்பரங்கள் மற்றும் பிரசார வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தனை கோடி டாலர்கள், நவீன தொழிநுட்பப் பிரசாரங்கள், மஸ்க்கின் நேரடிச் செல்வாக்கு—இவை அனைத்தையும் கடந்து அமெரிக்க மக்கள் வழங்கிய தீர்ப்பு என்ன? பணபலம் ஒருபுறமிருக்க, ஜனநாயகத்தின் வாக்குபலம் வேறுபக்கமாய் வீசியதால், மஸ்க் உயிரைக் கொடுத்துப் போராடிய டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய பல மாநிலங்களில் குடியரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனநாயகக் கட்சி கைப்பற்ற, எலன் மஸ்க் அள்ளி வீசிய 474 மில்லியன் டாலர் நிதி வரலாற்றுச் சாதனையோடு வெறும் தோல்விக் கணக்காகவே முடிவுக்கு வந்துள்ளது.


