Wednesday, April 8, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldஅமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 10 கட்டளைகள்!

அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 10 கட்டளைகள்!

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்த நிலையில், இந்த மோதல் முடிவுக்கு வருவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பில் பெரிய முரண்பாடு இருப்பது தெரிய வந்துள்ளது. யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான அறிவிப்பில் இரு வேறு கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்று காலை ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் 10 அம்ச திட்டத்தை முன்மொழிந்ததாகவும், அதை டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்வதாகவும் கூறப்படுகிறது.. இந்த அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றம் சற்றே தணியும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே ஈரான் போட்ட கண்டிஷன்களில் ஒரு விஷயம் உலகெங்கும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யவே யுரேனியத்தை செறிவூட்டுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்த போரை ஆரம்பிக்க டிரம்ப் சொன்ன முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று. இருப்பினும், இதை மறுத்த ஈரான், அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கவே யுரேனியத்தை செறிவூட்டுவதாகக் கூறியது.

இந்த விவகாரத்தைப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் ஈரான் எழுப்பியுள்ளது. முரண்பாடு ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. ஆனால், இதில் கவனிக்க வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் செறிவூட்டல் திட்டத்தை ஏற்க வேண்டும் என்ற விடயம் போர் நிறுத்தம் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கில பதிவில் இல்லை. அதாவது ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் பார்சி என இரு மொழிகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் ஃபார்சி மொழி செய்திக்குறிப்பில் மட்டுமே யுரேனியம் செறிவூட்டல் குறித்த அறிவிப்பு இருந்தது. ஆங்கிலப் பதிப்பில் இது இல்லை.

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா விதித்த காலக்கெடு நெருங்கிய சூழலில், கடைசி நேரத்தில் தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. முதலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர், அமெரிக்காவுடனான இரண்டு வாரப் போர் நிறுத்தத்தை ஈரானும் உறுதி செய்தது. போர் நிறுத்தம் அமலில் இருக்கும் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானும் பதிலடி கொடுப்பதை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நிலைப்பாடு ஈரானின் 10 அம்ச முன்மொழிவில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ஈரான் ஊடகங்கள் கூறினாலும் கூட அதை அமெரிக்கா உறுதி செய்யவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட அதை பரிசீலனை செய்கிறோம் என மட்டுமே கூறியிருந்தாரே தவிர, ஏற்பதாகச் சொல்லவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதே போரின் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்கா யுரேனியம் செறிவூட்டலை ஏற்க ஒப்புக்கொண்டது என்பது நம்பும்படி இல்லை.

10 (அம்சங்கள்) பாயிண்டுகள்
  • எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது
  • ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு தொடர வேண்டும்
  • யுரேனியம் செறிவூட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும்
  • முதன்மையான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
  • இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்.
  • ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனைத்து தீர்மானங்களையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
  • சர்வதேச அணுசக்தி முகமை குழுவின் அனைத்து தீர்மானங்களையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்
  • ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
  • வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்கப் போர்ப் படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும்
  • லெபனானுக்கு எதிரான போர் உட்பட அனைத்து போர்களையும் நிறுத்த வேண்டும்.
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular