இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் அமெரிக்கா குறைத்துள்ளது.
இந்த புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை விளக்கி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கூறுகையில்,
“இந்த சவால்களுடன், புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இரு நாடுகளும்… எதிர்காலத்தில் இதன் மூலம் நமக்குத் தேவையான பலன்களைப் பெறப் போகின்றன என்பதை இது காட்டுகிறது. நாடாக இதை ஒரு சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். இந்த கலந்துரையாடங்களை தொடர நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதற்கிடையில், அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, X கணக்கில் குறிப்பு ஒன்றை இட்டுள்ளார்.
இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் மீதும் இதேபோன்ற 20% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
நமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான நன்மையை வழங்க, அந்த விகிதத்தை 15% ஆகக் குறைக்க அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.