Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரசாங்கக் கொள்வனவு சட்டத்தில் பாரிய ஓட்டைகள்: அம்பலப்படுத்திய நிதிக்குழு!

அரசாங்கக் கொள்வனவு சட்டத்தில் பாரிய ஓட்டைகள்: அம்பலப்படுத்திய நிதிக்குழு!

  • அரசாங்கக் கொள்வனவு சட்டத்தில் பாரிய ஓட்டைகள்: நிதிக்குழு அம்பலப்படுத்திய திடுக்கிடும் உண்மைகள்!
  • மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தொடரும் தட்டுப்பாடு: அரச கொள்வனவு பொறிமுறையில் சிக்கல்!
  • தடைப்பட்ட PROMIS திட்டம்: உலக வங்கியின் $4.5 மில்லியன் நிதியுதவியுடன் களமிறங்கும் புதிய கொள்வனவு சட்டம்!

அரசாங்கத் தேவைகளுக்காகப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் அரச கொள்முதல் கட்டமைப்புக்குள் (Procurement Process) பாரிய ஓட்டைகளும், கடுமையான நிர்வாகச் சீர்கேடுகளும் காணப்படுவதாக அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழு (COPF) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரச பணத்தின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் உறுதி செய்வதில் நிலவும் இந்த பாரதூரமான பலவீனங்கள் நாடாளுமன்ற மட்டத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

நாடாளுமன்றில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே, புதிய கொள்முதல் சட்டத்தை உருவாக்குவது மற்றும் தற்போதைய பொறிமுறையைச் சீரமைப்பது தொடர்பான விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் கலந்துகொண்டு கள நிலவரங்களைச் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, நாட்டின் சுகாதாரத்துறையைப் பாதிக்கும் வகையிலான மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவில் ஏற்படும் நீண்டகாலத் தாமதங்கள் தீவிர கவனத்திற்குட்படுத்தப்பட்டன. மருந்துப் பதிவு நடைமுறைகளில் நிலவும் இழுத்தடிப்புகளைக் களைந்து சந்தைப் போட்டியை அதிகரிப்பதுடன், மீளமீள இடம்பெறும் கொள்வனவுகளுக்காக நீண்டகாலக் கட்டமைப்பு உடன்படிக்கைகளை (Framework agreements) அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, முறைகேடுகளைத் தடுத்து கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘PROMIS’ (Procurement Management Information System) கட்டமைப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது 19 அமைச்சுக்கள் மற்றும் 394 கொள்முதல் பிரிவுகளில் இயங்கிவரும் இக்கட்டமைப்பை, 2027 ஆம் ஆண்டளவில் மாகாண சபைகள் மற்றும் சகல திணைக்களங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், தொழில்நுட்ப ரீதியிலான தாமதங்கள் காரணமாக முந்தைய ஒப்பந்தக்காரருடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை மீளக் கட்டியெழுப்புவதற்காக உலக வங்கியினால் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்கப்படவுள்ளதுடன், புதிய மென்பொருள் வடிவமைப்பாளரைத் தெரிவு செய்யும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்டு உலக வங்கியின் இறுதி அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்ளும் போர்வையில் கறுப்புப் பட்டியலில் (Blacklist) உள்ள நிறுவனங்கள் மறைமுகமாக உள்நுழைவதைத் தடுக்கும் வகையில், நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர் (Beneficial Ownership) விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கும் கடுமையான சரத்துக்களுடன் புதிய கொள்முதல் சட்டத்தை வகுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular