அஸ்வெசும ஆறுதல் நலன்புரி திட்டத்தின் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளின் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படுமென சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
பயனாளிகளின் பட்டியல் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை குடும்பங்களுக்கான பெயர் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரை 5 இலட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகளும், 5 ஆயிரத்து 419 ஆட்சேபனைகளும் கிடைப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இன்னும் வெளியிடப்படாத பயனாளிகளின் இரண்டாவது பட்டியலில் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளனர்.
அதன்படி நாளை மறுதினம் அந்தப் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.