Saturday, April 12, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅ.இ.ம.கா, 13 மாவட்டங்களில் போட்டி!

அ.இ.ம.கா, 13 மாவட்டங்களில் போட்டி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது.

அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, கரைத்துரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை மற்றும் நாத்தாண்டிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் புத்தளம் மாநகர சபை, வனாத்தவில்லு பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, சிலாபம் பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபை, குருநாகல் பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பண்டுவஸ்நுவர பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து தனது மயில் சின்னத்திலும் பொல்கஹவெல பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவபொத்தான பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, கெப்பெட்டிகொல்லாவ பிரதேச சபை, பலாகல பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கண்டி மாவட்டத்தில் உடுநுவர பிரதேச சபை, பூஜாபிட்டிய பிரதேச சபை, பாததும்பர பிரதேச சபை, , பாதஹேவாஹெட்ட பிரதேச சபை, உடபலாத பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை, ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேச சபை மற்றும் பண்டாரகம பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் பேருவளை நகரசபை, பேருவளை பிரதேச சபை, களுத்துறை மா நகரசபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தில் கொலொன்னாவை நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,

‘உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் மூலமே கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கோள்ள முடியும். தேசிய அரசியலில் நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசியல் செய்த போதும், ஜனாபதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாம் ஆதரித்த வேட்பாளர்களுக்கு, எமது கட்சி சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் நலன்விரும்பிகளும் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.


எனினும், ஆட்சி முறைமை மாற்றங்களினால் நாம் பின்னடைவை சந்தித்திருந்த போதும், எமது கட்சியின் வாக்குத்தளத்தில் எந்தவிதமான சரிவும் ஏற்படவில்லை.

அந்தவகையில், சமூக நலனை முன்னிறுத்தி வாக்காளர்களாகிய நீங்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாக்களித்தால், நாம் மீண்டும் முன்னரைப் போன்று அநேக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியும் என நம்புகின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular