ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 800 பேர் வரை பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியான நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.
நங்கர்ஹார் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6 ஆகவும், அடுத்த நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
