Wednesday, July 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇன்று சர்வதேச சமூக வலைத்தள தினம்!

இன்று சர்வதேச சமூக வலைத்தள தினம்!

தொடர்பாடலும் தகவல் பரிமாற்றத்துக்குமான ஒரு பெரிய புரட்சி சமூக வலைத்தளங்களால் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 அன்று சமூக வலைத்தள தினம் (Social Media Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் அதன் பயன்களை நினைவூட்டும் வகையில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. 

சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? 

சமூக வலைத்தளங்கள் என்பது, இணையத்தின் மூலம் உலக மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும், தகவல்களைப் பகிரும், கருத்துகள் பரிமாறும் தளங்கள் ஆகும். இவற்றில் உதாரணமாக Facebook, X, Instagram, YouTube, LinkedIn, TikTok ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

சமூக வலைத்தளங்களின் சிறப்புகள்: 

உலகம் ஒரு கிராமமாகும்: சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கு இருந்தாலும் நம்மை விரைவாக மற்றவருடன் இணைக்க முடிகிறது. அறிவுத் தரவுகள் பரிமாற்றம்: கல்வி, செய்தி, தொழில், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தகவல்களை விரைவில் பகிர முடிகிறது. 

தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது: நிறுவனங்கள், சிறு தொழில்கள், உற்பத்தியாளர்கள் தங்களது சேவைகள், பொருட்களை விளம்பரப்படுத்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். 

படைப்பாற்றலுக்கு மேடை: நகைச்சுவை, பாடல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை பகிர அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. 

பாதகப்பாடுகளும் உள்ளன: 

தவறான தகவல்கள் பரவல்: உண்மைதான் என நினைத்து சிலர் தவறான தகவல்களை பகிர்வதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. மேலும் படிப்பு, வேலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் சிதறுகிறது. 

துன்புறுத்தல், தனிமை: 

சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள், விமர்சனங்கள் மூலம் பிறரை மனவளமாக பாதிக்கின்றனர். 

தீர்வுகள் மற்றும் விழிப்புணர்வு: 

சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல். 
உண்மைத் தகவல்களை மட்டுமே பகிர்தல். 
தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம். 

குழந்தைகள், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை சரியான முறையில் பயன்படுத்த பெற்றோர் வழிகாட்ட வேண்டும். 

இன்று, சமூக ஊடகங்கள் மனித சித்தாந்தங்களை உருவாக்கி சிதைக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது, மேலும் அவை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். 

இணையத்தின் வளர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களும் நாளடைவில் மேலும் முக்கிய இடத்தைப் பெறப்போகின்றன. அதனால், நாம் இதை பொறுப்புடன், நல்ல நோக்கத்தில் பயன்படுத்துவதுதான் எதிர்காலத்திற்கு அவசியம். சமூக வலைத்தள தினம் என்பது, நம்மை தொடர்புறுத்தும் தொழில்நுட்பங்களை கொண்டாடும் நாளே அல்லாமல், அவற்றை எப்படி நன்மைக்கு பயன்படுத்தலாம் என்பதை நினைவூட்டும் நாளாகவும் அமைகிறது. இந்த நாளில் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை எதிர்மறை பாதிப்பின்றி, விழிப்புணர்வுடன் பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம். 

இதேவேளை, நாட்டில் சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க, கீழ்வருமாறு தெரிவித்தார். 

“எந்தவொரு நாட்டிலும் பலர் சமூக ஊடகங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் காரணம் ஊடகங்களின் பயன்பாடு குறித்த தவறான புரிதல்கள் என்று நான் நினைக்கிறேன். முதலில், இதன் முக்கியத்துவம் என்பது இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவதில்தான் உள்ளது. சுமார் 20 முதல் 25 வருடங்களுக்கு பின்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் அது ஊடகங்களில் பெரிய மாற்றத்திற்கு உள்ளான ஒரு துறை. இன்றைய சமூகம் சமூக ஊடகங்கள் இல்லாமல் இருக்க முடியாது.” 

தொடர்ந்து கருத்து வௌியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க, நாட்டின் மக்கள் தொகையில் 53% பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றார். 

இது சுமார் 12 மில்லியன் என்று அவர் குறிப்பிட்டார், மேலும் சமீபத்திய தரவுகளுக்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டோக் பயன்பாடு சுமார் 30% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஏனைய சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடகமாகும் என்று விஜயானந்த ரூபசிங்க கூறினார். இலங்கையில் டிஜிட்டல் ஊடகங்கள் எழுத்தறிவை வளர்ப்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular