நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.
இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார்.
இந் நிலையில் நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று (26) இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.