கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தின் பாகங்கள் பள்ளத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டுவரப்பட்டுள்ளன.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் இந்தப் பேருந்தின் பாகங்களை மீட்டுள்ளனர்.
குறித்த பேருந்து பாகங்கள் மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், 35இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
