2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இரணைமடு குளத்தின் நீர் இன்று சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது.
காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான முதலாவது சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.
கடந்த வருட இறுதிப்பகுதியில் நாட்டின் பெரும்போக செய்கை அறுவடை செய்யப்பட்டதை அடுத்து சிறுபோகத்திற்கான செய்கையை இரனை மடு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வருட இறுதியில் பெய்த கடும் மலை மற்றும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பெரும் பகுதிகளில் பெரும்போக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
2025ம் ஆண்டு சிறுபோக செய்கை ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 20
25 சிறுபோகத்தில் 19164 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 382 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்