Thursday, November 21, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsஇஸ்ரேலை விரட்ட ஹமாஸ் போட்டுள்ள பகீர் பிளான்

இஸ்ரேலை விரட்ட ஹமாஸ் போட்டுள்ள பகீர் பிளான்

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதேநேரம் இப்போது ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.

காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மிக விரைவில் முழு வீச்சில் படையெடுப்பையும் ஆரம்பிக்க உள்ளது.

ஹமாஸ் படை: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹமாஸ் முழு வீச்சில் ரெடியாகி வருகிறது. இதனால் மிகப் பெரிய மற்றும் நீண்ட போருக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது.

இதன் மூலம் போர் நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் குழு அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது.

காசாவுக்கு அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளைக் கொண்டு ஹமாஸ் பல மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என்பதில் ஹமாஸ் உறுதியாக இருக்கிறது. மேலும், இஸ்ரேல் படைகள் உள்ளே இறங்கினால் அவர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்களை விரக்தியடையச் செய்யவும் ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.

குறிவைக்கப்படும் அமெரிக்கா?

முதலில் ஹமாஸ், அடுத்து இப்போ ஹிஸ்புல்லா! இஸ்ரேல் போரில் பகீர் திருப்பம் என்ன திட்டம்:

இஸ்ரேலை முடிந்தவரைத் தடுத்து நிறுத்துவதே ஹமாஸ் நோக்கமாக இருக்கிறது. ஹமாஸை சில வாரங்கள் வரை தொடர்ந்து தடுத்து நிறுத்தினால், அதற்குள் சர்வதேச அழுத்தம் காரணமாகப் ​​போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது. இதை இலக்காக வைத்தே ஹமாஸ் திட்டம் போட்டு வருகிறது.

ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக கத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இஸ்ரேலில் இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிப்போம் என்று ஹமாஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதனால் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்பது ஹமாஸுக்கு நன்கு தெரியும். அது தெரிந்தாலும் ஹமாஸ் தனது திட்டத்தில் பின்வாங்க ரெடியாக இல்லை.

ஹமாஸ் குறித்து நீண்ட ஆய்வு செய்யும் கத்தார் பல்கலைக்கழக வல்லுநர் அதீப் ஜியாதே இது குறித்துக் கூறுகையில், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் பார்த்திருப்பீர்கள். மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட அந்த தாக்குதலை நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் திட்டமிட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பதை ஹமாஸ் உணர்ந்தே இருந்தது. இதனால் அவர்கள் ஏற்கனவே நீண்ட காலப் போருக்குத் தயாராகியிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். நீண்ட கால சண்டைக்கு ரெடியாகாமல் ஹமாஸ் அந்தத் தாக்குதலை நடத்தி இருக்காது என்றார்.

அதேநேரம் ஹமாஸின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவும் கருத்து கூறி இருக்கிறது. அதாவது காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் போது அதை ஹமாஸ் எவ்வளவு முடியுமா எவ்வளவு நீட்டிக்கும். அப்போது உயிரிழப்பு நிச்சயம் அதிகரிக்கும். அந்த செய்திகளை வைத்து மக்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதே ஹமாஸின் திட்டமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஏற்கனவே சுமார் 40,000 பேரைத் திரட்டவிட்டதாகவே கூறப்படுகிறது. இவர்களுக்கு அங்குப் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்ட பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதைகள் எல்லாம் அத்துப்படி.

80 மீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை வலையமைப்பில் அவர்களால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். 120 கிமீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ஹமாஸ் வைத்துள்ளனர்.

இத்துடன் மேலும் பல ஆயுதங்களையும் அவர்கள் குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போர் ஆரம்பித்தால் எப்படியும் அது நீண்ட காலத்திற்குச் செல்லும் என்பதால் உணவுகளையும் கூட ஹமாஸ் சேமித்து வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. அதாவது அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பே ஆயுதங்கள், உணவுகளைக் குவித்துள்ளனர்..

மேலும் வீரர்களையும் திரட்டியுள்ளனர். இப்போது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் இதை வைத்து இஸ்ரேலைத் தடுக்க முடியும் என்று ஹமாஸ் நம்புகிறது.

ஏற்கனவே, அண்டை அரபு நாடுகள் இஸ்ரேலின் செயல்களைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. வரும் நாட்களில் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular