பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேலில் அடுத்த முறை நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ம் தேதி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலை காரணம் காட்டி கடந்த 49 நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்க்ள கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகம். இதை இப்படியே விட்டால் ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் காலியாகிவிடும் என பயந்த அண்டை நாடுகள், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கின. பிணை கைதிகளை விடுவிப்பதாக சொன்னால் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக இஸ்ரேல் கூறியது. இதனையடுத்து தற்போது போர் தற்காலிமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், பிணை கைதிகளாக உள்ள தங்களின் உறவினர்களை மீட்ட தாமதம் செய்துவிட்டார் என்றும் இஸ்ரேல் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தேர்தல் வந்தால் நெதன்யாகு மீண்டும் பிரதமராக தேர்வாக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஹீப்ரு செய்தி நிறுவனமான Maariv இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது நெதன்யாகு கட்சிக்கு வெறும் 3.25 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் மொத்தம் 120 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை வென்றது. கூட்டணி கட்சிகளும் 32 இடங்களை வென்று 64 என்கிற பெரும்பான்மையுடன் நெதன்யாகு பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை லிகுட் கட்சி 18 இடங்களில் சுருங்கிவிடும். கூட்டணி கட்சிகளை எல்லாம் சேர்த்தாலும் கூட மொத்தமாக 49 இடங்களைதான் பெற முடியும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. மறுபுறம் எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய ஒற்றுமைக் கட்சி 43 இடங்களை வெல்லும். கூட்டணியை சேர்த்தால் 79 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றும் என கணிப்புகள் கூறியுள்ளன. அதேபோல இஸ்ரேலின் பிரதமாராக இருக்க யார் பொருத்தமானவர்கள் என்றும் கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் காண்ட்ஸ்தான் பொருத்தமானவர் என்று பதிலளித்துள்ளனர். 27% பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு சப்போர் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.” |
இஸ்ரேல் பிரதமரின் தலையில் இடியை இறக்கிய கருத்துக்கணிப்பு!
RELATED ARTICLES