Sunday, January 11, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldஈரானில் பற்றி எரியும் போராட்டம்: வன்முறையில் 62 பேர் பலி!

ஈரானில் பற்றி எரியும் போராட்டம்: வன்முறையில் 62 பேர் பலி!

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.

இந்நிலையில், வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. மேலும், ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular