Sponsored Advertisementspot_img
HomeLocal News"ஈரான் போர் முடிவுக்கு வந்தது": கச்சா எண்ணெய் விலை சரிந்தது!

“ஈரான் போர் முடிவுக்கு வந்தது”: கச்சா எண்ணெய் விலை சரிந்தது!

  • “ஈரான் போர் முடிவுக்கு வந்தது”: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலகச் சந்தையில் அதலபாதாளத்திற்குச் சரிந்த கச்சா எண்ணெய்!
  • பீப்பாய் 112 டொலரிலிருந்து 92 ஆக வீழ்ச்சி: வெள்ளை மாளிகையில் கத்தாருடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை!
  • போர் மேகங்கள் விலகுகின்றனவா? ஈரான் மீது புதிய தாக்குதல்கள் இல்லை என அமெரிக்கா திட்டவட்டம்!

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வந்த மத்திய கிழக்கு யுத்த பதற்றத்தில், சர்வதேச வர்த்தகச் சந்தையைத் தணிக்கக்கூடிய ஒரு அதிரடித் திருப்பம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நேரடித் தாக்குதல்கள் இராணுவ ரீதியாக “முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் விடுத்த இந்த திடீர் அமைதி சமிக்ஞை, உலகப் பங்குச் சந்தைகளிலும் எரிபொருள் சந்தையிலும் உடனடியாகப் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வரை பீப்பாய் ஒன்று 112 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உச்சத்தில் கொதித்துக்கொண்டிருந்த உலகளாவிய பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை, நொடிப்பொழுதில் 92 முதல் 93 டொலர்கள் வரை வீழ்ச்சி கண்டது. அதேபோன்று அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெயும் 86 டொலர்கள் வரை மிக வேகமாகக் கீழ்நோக்கி இறங்கியுள்ளது.

போர் தணியும் என்ற இந்த எதிர்பார்ப்புக்குப் பின்னால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற அதிரடி இராஜதந்திர நகர்வுகளே பிரதான காரணமாக அமைந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பலமிக்க நடுநிலையாளராகச் செயற்படும் கட்டார் நாட்டின் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, வெள்ளை மாளிகைக்கு நேரில் சென்று ஜனாதிபதி ட்ரம்புடன் நடத்திய மிக நீண்ட கலந்துரையாடலே இம்முடிவை நோக்கி அமெரிக்காவைத் திருப்பியுள்ளது.

பிராந்திய யுத்தம் விஸ்வரூபமெடுத்து ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பேரழிவிற்குள் தள்ளிவிடக்கூடாது என்பதில் கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் மிகத் தீவிரமாக நின்றன. அண்டை நாடுகளின் கடுமையான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, ஈரான் மீது மேலதிக தாக்குதல்களை நடத்தாமல் தற்போதைய நிலையையே தொடரத் தீர்மானித்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், முழுமையான அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை போர்க்கள அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை. மேலதிக ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தற்போது தேவையில்லை எனக் கூறினாலும், ஈரானுடன் உத்தியோகபூர்வ சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படும் வரை அமெரிக்கப் படைகள் உச்சக்கட்ட தயார் நிலையிலேயே இருக்கும் என்றும், அந்நாட்டுத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடரும் என்றும் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular