(உடப்பு க.மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ விழாவில் நேற்று (25)காலை விஷேட ஸ்நபன அபிஷேகம் மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.கே.ஜெயக்கிருஷ்ணா இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
உடப்பு ஆலயத்தின் மகிமை பற்றி அவர் எடுத்துக்கூறியதுடன், உடப்பில் வாழும் சைவ மக்கள் கலை கலாச்சாரத்தையும், தெய்வ பக்தியையும் அழியாது போற்றி வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதன் போது அறிவிப்பாளருக்கு விஷேட காலாஞ்சி ஆலய பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் வழங்கி வைத்தார்.
குறித்த பூஜை நிகழ்வில் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வை.கந்தசாமியும், ஊடகவியலாளர் உடப்பூர் வீரசொக்கன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.





