மன்னார் எருக்கலம்பிட்டி ஸயீதிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் நேற்று 19.03.2025 புதன் கிழமை மாபெரும் இப்தார் நிகழ்வு கல்லூரி அதிபர் அஷ்ஷைக் அல்உஸ்தாத் ஷிபான் முஹாஜிரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஸயீதிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு K.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இப்தாரில் கலந்துகொள்ள வருகை தந்த அதிதிகளுக்கு கல்லூரி மாணவர்களினால் வரவேற்பு பைத் படிக்கப்பட்டு மலர் செண்டும் வழங்கிவைக்கப்பட்டது.
ரமழானின் நோக்கங்களும், மார்க்க கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு சமூகத்தில் முன்னின்று செற்படவேண்டும் என்றும் வருகை தந்த அதிகாரிகளினால் தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அணர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு நிஸாம்தீன், மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் திரு அஷாட், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி திரு பிரின்ஸ், மாவட்ட வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் திரு திஸார, விசேட அதிரடிப் படை மன்னார் மாவட்ட கட்டிலை அதிகாரி, தேசிய இளைஞர் படையணி மன்னார் மாவட்ட பணிப்பாளர் திரு சர்ராஜ்., முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு இஸ்ஸதீன், எருக்கலம்பிட்டி இரு பள்ளிவாசல்கள் நிர்வாக சபைத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஜனாஸா பௌண்டேஷன் அமைப்பினர், தாருஸ்ஸலாம் நலன் புரிச்சங்கத்தின் உலமாக்கள், தனவந்தர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






