மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று திங்கள் 29. 3. 2021 பாடசாலையில் நடைபெற்றது.
60 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக சுமார் 100 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் 3 வாக்களிப்பு நிலையங்களில் 300க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படயிருப்பதுடன் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 6.4.2021 செவ்வாய்க்கிழமை பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக உதவித் தேர்தல் ஆணையாளர் (வவுனியா, மன்னார்) அவர்களும்
மன்னார் கல்வி வலய அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இவ்வாரான செயற்பாடுகள் மாணவர்களின் உதிர்கால தலைமைத்துவ பண்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்குமென பாடாசலை அதிபர் ஜனாப் S. அஸ்மி அவர்கள் எமது eNews1st ற்கு தெரிவித்தார்.
இன்றைய இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் வாக்களித்த எந்த ஒரு வாக்கும் செல்லுபடியற்ற வாக்காக பதியப்படாமையானது ஓர் விஷேட அம்சமாகும்.