இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன.
ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்.
நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது – பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.
இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது – அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்