ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்டப் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய தவிசாளராக , கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாவால் இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


