Sponsored Advertisement
HomeERUKKALAMPIDDYஐஸ் போதைப் பொருட்களுடன் நாகவில்லில் மூவர் கைது

ஐஸ் போதைப் பொருட்களுடன் நாகவில்லில் மூவர் கைது

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் நேற்று இரவு நாகவில்லு பகுதியில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றை விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் சிக்கினர்.

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், அவற்றை சில்லறை விற்பனைக்கான  தயார்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் விசேட சுற்றிவளைப்பில் இம்மூவரும் பிடிபட்டனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதை பொருட்களின் அளவை நிறுக்கும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்றும், யாரினால் விற்பனை செயப்பட்டது என்ற மேலதிக விபரங்களும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவினால் பெறப்பட்டதுடன், ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் பிடிப்பட்ட மூவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றைய மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக கல்பிட்டி பகுதியில் இருந்து வந்திருந்த இருவர் பிடிபட்டனர்.

இவர்கள் பலமுறை நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக வந்தவர்கள் என்பது விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

மேலும் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் நாகவில்லு பகுதியில் மற்றுமொரு நபரும் புத்தளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட இந் நால்வரும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version