வத்தளை – ஹெந்தலை பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கிலோகிராம் 14 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று (8) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் இருந்து, சட்டவிரோதமான வழியில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 15 இலடட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.