Thursday, March 5, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் வீட்டில் கொள்ளை!

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் வீட்டில் கொள்ளை!

ஜூட் சமந்த

நாத்தாண்டிய – பஹல தப்பொவ பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டை உடைத்து, சுமார் 6,80,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான விக்கிரமசிங்க சேனநாயக்க அப்புஹாமிலாகே கித்சிறி உபுல் சேனநாயக்க (60 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மார்ச் 1ஆம் திகதி காலை 6.00 மணியளவில் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், மார்ச் 2ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இந்த இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

  • அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6,50,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள்.
  • புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய் பணம்.
  • மற்றொரு அறையிலிருந்த அலமாரியில் இருந்த 20,000 ரூபாய் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த பொலிஸார், அதன் வழியாகவே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular