ஜூட் சமந்த
கடலரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுவரும் ஆராச்சிகட்டுவ – முத்துபந்தியா தீவின் கடற்கரையைப் பாதுகாக்க கடலோரப் பாதுகாப்புத் துறையினர் மணல் மூட்டைகளைக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
“டிட்வா” சூறாவளியால் ஹாமில்டன் கால்வாயிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியதால், முத்துபந்தியா தீவில் ஒரு புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டு, கடுமையான கடல் அரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் முத்துபந்தியா தீவு, மேற்கில் திறந்த கடலுக்கும் கிழக்கில் ஹாமில்டன் கால்வாய்க்கும் இடையில் அமைந்துள்ளதுடன், தீவுவாசிகளின் முக்கிய வாழ்வாதாரமாக மீன்பிடித்தல்மற்றும் இறால் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துபந்தியா தீவு ஆனவிலுண்தாவ ராம்சர் தளத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், அந்தப் பகுதி சுற்றுலாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முத்துபந்தியா தீவில் ஒரு புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டதால் இரண்டு வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடல் அரிப்பு காரணமாக மேலும் பல வீடுகள் சேதமடையக்கூடும் என்று தீவுவாசிகள் கூறுகின்றனர்.
கடலோரப் பாதுகாப்புத் துறை தற்போது கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த மணல் மூட்டைகளை அமுல்படுத்தி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கழிமுகத்தை மூடுவதற்கு அவசரமாக ஒரு கிரானைட் தடையை அமைக்குமாறு முத்துப்பந்தியா கிராமப்புற மீனவர் அமைப்பு புத்தளம் மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
புதிய கழிமுகம் உருவாக்கப்படுவதால் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.


