Sponsored Advertisement
HomeLocal Newsகடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் ஏன் உயர் பதவிகளில்?

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் ஏன் உயர் பதவிகளில்?

கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற முஜுபுர் ரஹ்மான் (Mujibur Rahman) கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு தெரிவித்துள்ளதாவது,
“ஒரு நாடாக, நாம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், சுதந்திரத்திற்குப் பிறகு  இலங்கை என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல முடியவில்லை.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற அண்டை நாடுகள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மரியாதை காரணமாக முன்னேறியுள்ளன.

76 ஆண்டுகளாக தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசி வருகிறோம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த விடயத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் மிகவும் அரிதான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது, ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவுக்கு இவ்வாறானதொரு மக்கள் ஆணை கிடைத்தது.

ஆனால் அவராலும் இந்த பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு முன்னேற முடியவில்லை, நீங்கள் ஒரு நல்ல பயணத்தை நடத்த சட்டத்தின் ஆட்சியை நிறுவ தயாராகி வருகிறீர்கள்.

ஆனால், உயர் பதவிகளில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும்.” என்றார்.

Exit mobile version