அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (member of high command) புத்தள பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கலுபோவில றொஸ்வூத் சிலோன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவராக ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, செயலாளராக Y.L.S. ஹமீட் தெரிவுசெய்யப்பட்டார்.
கட்சியின் இன்றைய பேராளர் மாநாட்டில் 40 உயர்பீட உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தின் உயர்பீட உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்களும், கல்பிட்டி தொகுதியை பிரதிநிதித்துவப்பப்டுத்தி கல்பிட்டி பிராதேச உறுப்பினர் ஆஷிக் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.