யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம், உடன் அமுலாகும் வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக அவர் நடுநிலை வகித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.