மேற்கு கனேடிய மாகாணம் முழுவதும் பரவிய காட்டுத் தீயை அடுத்து ஆல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டுத் தீ பரவலையடுத்து குறைந்தது 25,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மாகாணத் தலைநகர் எட்சனில் வசிக்கும் 8,000 க்கும் அதிகமான மக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாகாணத் தலைநகர் எட்மண்டனுக்கு மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள டிரேட்டன் பள்ளத்தாக்கு மற்றும் நகருக்கு வடக்கே சுமார் 550 கிமீ தொலைவில் உள்ள ஃபாக்ஸ் லேக் பகுதிகளில் 20 வீடுகள் தீயில் கருகின.
பலத்த காற்று வீசுவதால், தீயை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான தாங்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வெளியேற்றப்பட்ட 1,000க்கும் மேற்பட்டவர்கள் எட்மண்டன் எக்ஸ்போ சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அல்பர்ட்டா ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி தளமாகும். எவ்வாறாயினும், இதுவரை எண்ணெய் கிடங்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.